News September 3, 2025

விலை குறைகிறது… இன்று முக்கிய முடிவு

image

மோடி சொன்ன ‘<<17521105>>தீபாவளி பரிசுக்காக<<>>’ பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்றும் நாளையும் நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில் 5%, 18% என 2 அடுக்குகளாக கொண்டுவருவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்க்கரை உள்ளிட்ட பலசரக்கு முதல் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் கார், சிகரெட் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

Similar News

News April 3, 2026

இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுக: கனிமொழி

image

PTR-ஐ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் மதுரை மத்திய தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத வேட்பாளரை(சுந்தர்.சி) நிறுத்தி இருப்பதாக கனிமொழி விமர்சித்துள்ளார். PTR-க்காக வாக்கு சேகரிக்க சென்ற அவர், திமுக கோயில் நிலங்களை மீட்டு எடுத்திருப்பதாக கூறினார். மேலும், இந்துக்களை பாதுகாப்பதாக கூறும் கட்சிகள் இதை செய்யவில்லை எனவும், இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுகதான் என்றும் பேசியுள்ளார்.

News April 3, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு ₹800 உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 1 கிராம் ₹100 உயர்ந்து ₹13,850-க்கும், 1 சவரன் ₹800 அதிகரித்து ₹1,10,800-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

News April 3, 2026

உங்க தொகுதி வேட்பாளரின் சொத்து மதிப்பு தெரியணுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி உங்களுக்கு தெரியணுமா? இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்யவும். இதில் உங்கள் மாநிலத்தையும், தொகுதியையும் தேர்ந்தெடுக்கவும். தற்போது வரை உங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் குடும்ப விவரம், வழக்குகள், சொத்து மதிப்பு அனைத்து பட்டியலிடப்பட்டிருக்கும். இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும்.

error: Content is protected !!