News September 3, 2025
கள்ளக்குறிச்சி: வழுக்கி விழுந்து பரிதாப பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்ததை சேர்ந்தவர் மல்லிகா (வயது 70). கடந்த ஓராண்டாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வீடு வாசலில் இருந்து வழுக்கி விழுந்து மயங்கினார். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 7, 2025
கள்ளக்குறிச்சியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (செப்.,6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
கள்ளக்குறிச்சி மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<
News September 6, 2025
கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட சார்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சிக்கு https://iei.tahdco.com/gel_reg.php என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.