News September 3, 2025

புதுவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் சாவு

image

புதுவை பூமியான்பேட், புது தெரு சதீஷ், தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷின் தந்தை கடந்த 30ம் தேதி இறந்தார். அதிலிருந்து மனமுடைந்த நிலையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 5, 2025

புதுச்சேரி: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முதல்வர் வரவேற்பு

image

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு பின்பு, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார், மேலும் மக்கள் பொருட்கள் வாங்குவது அதிகரிக்கும் என்றும், வரி குறைப்பை ஈடுசெய்ய நம் மாநிலத்திற்கு எது தேவையோ அதனை மத்திய அரசு செய்து தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

News September 4, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் கடற்படையில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்திய கடற்படையில் காலியாகவுள்ள 260 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.1,10,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 4, 2025

புதுச்சேரி: 10th போதும் ரூ.60,650 வரை சம்பளம்!

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் காலியாகவுள்ள 656 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு, டிப்ளோமா, ITI போதுமானது. சம்பளம் ரூ.16,900 முதல் ரூ.60,650 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!