News September 3, 2025
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) நடைபெற உள்ளது. வரும் செப்.8 காலை 9 – 4 மணி வரை, வாணியம்பாடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க உள்ளனர். ஷேர் IT
Similar News
News September 6, 2025
திருப்பத்தூர் மக்களே தப்பி தவறிக்கூட பண்ணிடாதீங்க

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News September 6, 2025
திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் தலைவர் இரானியப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், நவம்பர் மாத இறுதிக்குள் காலி மது பாட்டல்களை திரும்ப கூறும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது.
News September 6, 2025
வாங்கிய பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 9943304060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க