News September 3, 2025

வரியை குறைக்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை!

image

தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இதன் மூலமாக 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், இதற்காக செயற்கை இழை நூலுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 4, 2025

ஈரோடு சுகாதார துறை படிப்புக்கு வாய்ப்பு

image

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஈ.சி.ஜி, அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் துறை, அறுவை அரங்கு டெக்னீசியன், எலும்பு முறிவுத்துறை போன்ற படிப்புகளுக்கு 146 இடங்கள் காலியாக உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News September 4, 2025

ஈரோடு: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️<>newscheme.tahdco.com<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

News September 4, 2025

ஈரோடு: தெரு நாய் கடிக்கு 1503 பேருக்கு சிகிக்சை!

image

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியின் உண்டு உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் சசிரேகா வெளியிட்ட செய்தி ஈரோடு மாவட்டத்தில் வெறிநாய்க்கடிகளுக்காக கடந்த மாதத்தில் 1503 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாகவும், தீவிர பாதிப்பின் காரணமாக 69 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் தெரு நாய் கடி யில் இருந்து மக்களை பாதுகாக்க நாய்களுக்கு கருத்தடை செய்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!