News September 3, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? EPS விளக்கம்

திமுக கூட்டணி கட்சிகளே ஜாக்கிரதை, ஸ்டாலின் உங்களை விழுங்கிவிடுவார் என EPS விமர்சித்துள்ளார். திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், பொதுக்கூட்டங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அதிமுகவிற்கு பிரகாசமான ஒளி இருப்பது தெரிவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 4, 2025
விலகிய உடனே விஜய்க்கு ஆதரவு: புதிய கூட்டணியா?

NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த TTV தினகரன், விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் 2026-ல் விஜய்யின் தவெகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். இது தவெக கூட்டணிக்கு, TTV செல்லவுள்ளதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே OPS-ம் விலகிய நிலையில், செங்கோட்டையனின் நிலைப்பாட்டை பொறுத்தும் கூட்டணி கணக்கு மாறும் என்கிறது அரசியல் வட்டாரம்.
News September 4, 2025
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்!

மந்திரம்:
‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய,
ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’
*காலை பிரம்ம முகூர்த்த வேளையில் விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். SHARE IT.
News September 4, 2025
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு?

EPS பரப்புரையின்போது ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்குதலுக்கு உள்ளானது பேசுபொருளானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை HC-ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த HC, ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்தது. அத்துடன், போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து தமிழக DGP பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.