News September 3, 2025
ரஜினியே ரத்தத்தை நம்பி இருக்கிறார்: ராதா ரவி

வெட்டுக்குத்து உள்ள படங்கள் தான் தற்போது வெற்றி பெறுவதாக ராதா ரவி தெரிவித்துள்ளார். பட விழா ஒன்றில் பேசிய அவர், ரஜினிகாந்த் படத்திலேயே ரத்தக்கறைகள் படிந்துள்ளதாகவும், அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது நாம் என்ன பெரிய ஆளா? என்று கூறினார். சமீபத்தில் வெளியான ‘கூலி’ படம் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதா?
Similar News
News September 5, 2025
துலீப் டிராபி: ருதுராஜ், ஜெகதீசன் அதிரடி சதம்

துலீப் டிராபி தொடரில் மேற்கு – மத்திய மண்டல அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்களை விளாசி, தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நேர முடிவில் அந்த அணி 363/6 என எடுத்திருந்தது. இதனையடுத்து களம் கண்ட மத்திய அணியின் நாராயணன் ஜெகதீசன் 148 ரன்கள் விளாசி தொடர்ந்து களத்தில் உள்ளார்.
News September 5, 2025
செப்டம்பர் 5: வரலாற்றில் இன்று

*ஆசிரியர் தினம்
*1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
*1872 – சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள்.
*1888 – நாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்.
*1997 – அன்னை தெரசா நினைவு நாள்.
News September 5, 2025
உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: ஜெய்சங்கர்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான விரைவில் தீர்வு காணவும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் இந்தியா தனது ஆதரவை அளிப்பதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை உக்ரைனின் நிதியமைச்சர் ஆண்ட்ரி சிபியா உடன் அவர் பேசியுள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது, இந்தியா – உக்ரைன் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மோதல் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார். முற்றுபெறுமா போர்?