News September 3, 2025

10-வது மட்டுமே படித்தவர் ₹1 கோடி சேமித்த கதை

image

பெங்களூருவில் 10-வது மட்டுமே படித்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளில் ₹1 கோடி சேமித்து கவனத்தை ஈர்த்துள்ளார். ₹4,200 சம்பளத்தில் வேலையை தொடங்கிய அவர், வங்கிகளில் FD, RD மூலம் பணம் சேமித்துள்ளார். வேலைக்கு சேர்ந்த அடுத்த சில ஆண்டுகளில் கடின உழைப்பால் ₹63,000 வரை சம்பளம் உயர்ந்தாலும் அவர் வீடு, கார் என எதையும் வாங்கவில்லை. நமது இலக்குகளை அடைய பொறுமையும், ஒழுக்கமும் அவசியம் என அவர் கூறுகிறார்.

Similar News

News September 3, 2025

Google அக்கவுண்ட் யாராவது யூஸ் பண்றாங்கனு சந்தேகமா?

image

உங்களின் Google அக்கவுண்டை வேறு யாராவது யூஸ் பண்றாங்கனு சந்தேகமா?
➱Browser-ல் ‘Google.com/devices’ என டைப் செய்து தேடுங்கள்.
➱அக்கவுண்டின் பாஸ்வோர்ட் கேட்கும். அதனை கொடுத்தவுடன், அடுத்த பக்கத்தில், உங்களின் அக்கவுண்ட் log-in செய்யப்பட்டிருக்கும் சாதனங்களின் பட்டியல் வரும்.
➱இதில், உங்களுக்கு சந்தேகமான பயன்பாடுகள் இருந்தால், உடனே அவற்றை Log-out செய்யவும். SHARE IT.

News September 3, 2025

52 வயது காதலியை கொலை செய்த 26 வயது காதலன்

image

ஒன்றரை வருடமாக இன்ஸ்டாவில் காதலித்த பெண்ணை முதல்முறையாக நேரில் சந்தித்த போது, உ.பி.யை சேர்ந்த அருண்(26) அதிர்ச்சியடைந்துள்ளார். இன்ஸ்டா Filter-ஐ பயன்படுத்தி, தனது வயதை குறைத்து காட்டிய ராணிக்கு(52), 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்த பிறகும், அவருடன் தனிமையில் இருந்தது மட்டுமின்றி, ₹1.5 லட்சத்தையும் கறந்துள்ளார். ஆனால், ராணி தன்னை கல்யாணத்திற்கு வற்புறுத்தவே, அவரை துப்பாட்டாவால் கொலை செய்துள்ளார்.

News September 3, 2025

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா?

image

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 70 ஓட்டுநர், 33 பதிவறை எழுத்தர், 151 அலுவலக உதவியாளர், 83 இரவுக் காவலர் என்று 300-க்கு மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு, <>www.tnrd.tn.gov.in<<>> என்ற இணையளத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!