News September 3, 2025
சேலம்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!

சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் செயல்பட்டு வருகின்ற மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம், என சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயிலில் மாற்றம்!

தொழில்நுட்ப பணிகள் காரணமாக, வரும் செப்.06, 08, 09, 13 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (56108) மொரப்பூர் வரையிலும், மறுமார்க்கத்தில், ஜோலார்பேட்டை-ஈரோடு பயணிகள் ரயில் (56107) மொரப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும்; இந்த ரயில்கள் மொரப்பூர்- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 5, 2025
சேலம் அருகே ரூ.1 லட்சம் பணம் 2 பவுன் நகை மாயம்

சேலம் அனுப்பூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்மாள் இவர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில் தனது வீட்டில் பீரோவில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் ரெண்டு பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும் நேற்று மாலை திருமணத்திற்கு செல்ல பீரோவை திறந்த போது பணத்தையும் நகையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
News September 5, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பம் இல்லாத நேரடி சேர்க்கை நடைபெறுகிறது இது குறித்த விபரங்கள் https://gmkmc.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் பனிரெண்டாம் தேதிக்குள் விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்று ஆட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்