News September 3, 2025

கோவையில் 2,000 பேருக்கு இலவச பட்டா: ஆட்சியர் தகவல்

image

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில், இலவச பட்டா கோரி விண்ணப்பித்த 2,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும், 1,000 விண்ணப்பதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். விண்ணப்பிக்கும் பொதுமக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News September 3, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (03.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

கோவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

image

கோவையில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த அச்சம் இல்லை. மக்கள் பீதி அடையத் தேவையில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் பகுதி வாரியாக பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் தினசரி உள் நோயாளிகள் அனுமதி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News September 3, 2025

கோவை: பாலமலை அரங்கநாதர் கோயில்!

image

கோவை, கோவனூரில் உள்ள பாலமலை என்ற, இயற்கை எழில் கொஞ்சும் மலையில் அரங்கநாதர் வீற்றிருக்கிறார். இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக அமர்ந்துள்ள அரங்கநாதர், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் வல்லமை கொண்டவர். மாங்கல்ய வரம், குழந்தை வரம் வேண்டுபவர்கள், அரங்கநாதரை சனிக்கிழமைகளில் சென்று வழிபட்டு, ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தால், வேண்டுதல்கள் நிறைவேறுமாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!