News September 3, 2025
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.
Similar News
News December 7, 2025
சிவகங்கை: கிரேன் மோதி ஒருவர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம், சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் முத்துக்கருப்பன் (45). இவா் திருப்புவனம் ஒன்றியம் புலியூரில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் இயந்திரம் முத்துக்கருப்பன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் கிரேன் ஓட்டுனர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 7, 2025
காரைக்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியை சேர்ந்த சுப்பு என்பவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மலைப் பாம்பு இருப்பதாக காரைக்குடி தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர்
News December 6, 2025
சிவகங்கை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு!

சிவகங்கை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க


