News April 10, 2024
ஆச்சரியம் அளிக்கும் உச்சி பிள்ளையார் ஆலயம்

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் உலகப்புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார். இங்குள்ள விநாயகரை தரிசிக்க பக்தர்கள் 417 படிக்கட்டுகள் ஏறி கோயிலுக்கு செல்கின்றர். 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் தாயுமானவர் சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

திருப்பூர், கரட்டாங்காடு அருகே வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த முகமது ரபிக் மற்றும் விஜயராணி என்று இருவரை கைது செய்தனர். அங்கு இருந்த பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
News November 7, 2025
கடத்தல் வழக்கு: போலீஸுக்கு அன்புமணி கண்டனம்

தமிழகத்தில் <<18226171>>பெண்களுக்கு எதிரான குற்றங்கள்<<>> அதிகரிக்கும் நிலையில், திமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது என CM ஸ்டாலின் வீர வசனம் பேசி கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும், பெண்ணை மீட்க வேண்டிய போலீஸ், கடத்தல் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என கூறுவது பொறுப்பற்ற பதில் எனவும் சாடியுள்ளார். எவரேனும் புகார் அளித்தால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 7, 2025
BREAKING: இலவச பட்டா… தமிழக அரசு புதிய அறிவிப்பு

TN-ல் முதல்முறையாக உபரி நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க CM ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு உபரி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்கட்டமாக 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாகவும், இது TN முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


