News September 2, 2025

பாக்.,-ஐ ஆதரித்ததால் இந்தியா பழிவாங்குகிறது: அஜர்பைஜான்

image

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக, இந்தியா உலக அரங்கில் தங்களை பழிவாங்குவாதாக அஜர்பைஜான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக விரும்பிய தங்களது விண்ணப்பத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சாடியுள்ளது. இதுபோன்று இந்தியா எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும், பாகிஸ்தான் உடனான தங்களது நட்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Similar News

News March 5, 2026

வானதி சீனிவாசனுக்கு சீட் மறுக்கப்படுகிறதா?

image

பாஜகவில் சிட்டிங் MLA உள்பட முக்கியமான சிலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வானதி சீனிவாசன், வினோஜ் பி.செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோருக்கு சீட் கிடைக்காது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இளைஞர்கள் & புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 5, 2026

மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

image

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 5, 2026

அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

image

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!