News September 2, 2025
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் புத்தக வெளியீடு!

திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்துகின்ற புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இன்று செப்-02 திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு 28 புத்தகங்களை இன்று வெளியிட்டு புத்தகங்களின் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
Similar News
News September 3, 2025
திண்டுக்கல்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

திண்டுக்கல் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Deputy Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 3, 2025
சீட் பெல்ட் அணிவோம்! பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்!!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்வோம். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான முறையில், பயணம் மேற்கொள்ள வேண்டும் என சமூக தளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். எனவே, அனைவரும் இதை ஒரு பழக்கமாக கடைப்பிடிப்பது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.
News September 3, 2025
JUST IN: திண்டுக்கல் மாணவர்களுக்கு லேப்டாப்! – அமைச்சர்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, காவேரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து நத்தம்,வேடசந்தூர், ஆத்தூர் பகுதியில் குளங்களுக்கு நீர் கொண்டு வர சர்வே எடுத்து வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.(SHARE)