News September 2, 2025
சிம்பு பட அப்டேட் பகிர்ந்த வெற்றி மாறன்

சிம்பு படம் குறித்த அப்டேட் அடுத்த 10 – 15 நாள்களில் வெளியாகும் என வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். அதேபோல் ‘விசாரணை’ படத்தின் கதையை கேட்காமலேயே தனுஷ் ₹2.5 கோடி கொடுத்ததாகவும், ஆஸ்கர் விருது பிரசாரத்திற்காக ₹3.5 கோடி செலவு செய்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், அப்படம் ₹3.85 கோடி மட்டுமே வசூலித்ததால், தினேஷ், ஜிவி பிரகாஷ் மற்றும் நானும் சம்பளம் வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 3, 2025
CM ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குறுதிகளை உண்மையாகவே திமுக அரசு நிறைவேற்றியிருந்தால் அவற்றுக்கு ஒதுக்கிய நிதி, பயனடைந்தோர் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டிருக்க வேண்டும் என அன்புமணி தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் CM சொல்லும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
News September 3, 2025
தங்கம் 1 சவரன் ₹32 ஆயிரம் மட்டுமே.. 9 காரட் தெரியுமா?

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவது பலரையும் 9 காரட் தங்கத்தின் பக்கம் மக்களை திருப்பியுள்ளது. இதற்கு அண்மையில்தான் ஹார்மார்க் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 9 காரட்டில் 37.5% தங்கம் உள்ளது. இதன் மதிப்பு ஒரு சவரன் ₹31,800 மட்டுமே. இதனை மறுவிற்பனை செய்யும்போது, தற்போதைய மதிப்பை பொறுத்து பணம் கிடைக்கும். அதேநேரத்தில், 9 காரட் நகைகளை வைத்து வங்கிகளில் கடன் பெறுவது சிரமம்தான். SHARE IT.
News September 3, 2025
இந்திய அணியின் ஜெர்ஸியில் புது மாற்றம்

வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி ஜெர்ஸி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்ஸியில் ‘INDIA’ என்ற எழுத்துக்கள் மட்டுமே பெரிதாக பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தால், Dream 11-ன் ஸ்பான்சர்ஷிப் BCCI ரத்து செய்தது. அதையடுத்து, வரும் 16-ம் தேதிக்குள் நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.