News September 2, 2025
வடமாநில தொழிலாளர்கள் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்

காட்டுப்பள்ளியில், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் என்பவரின் மரணம் தொடர்பாக, வடமாநில தொழிலாளர்கள் இன்று (செப்.2) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் மீது கல்வீசித் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.5 லட்சம் நிவாரணமும், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Similar News
News September 3, 2025
திருவள்ளூர்: சிறுமி பாலியல் வழக்கில் 26 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2022ம் ஆண்டு கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (செப்.2), ரமேஷ் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ரூ. 26,000 அபராதம் மற்றும் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
News September 3, 2025
ஆவடி: வடமாநில ஊழியர்கள் விவரங்கள் சேகரிக்க உத்தரவு

ஆவடி பகுதியில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில நபர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூர் காட்டுப்பள்ளியில் போலீசார் மீது வடமாநில நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, வல்லூர் அனல் மின் நிலையம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகப் பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில ஊழியர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
News September 2, 2025
திருவள்ளூரில் கருவின் பாலினம் குறித்த விழிப்புணர்வு பேரணி.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை சார்பில், இன்று (செப்.2) கருவின் பாலினம் அறிவித்தல் மற்றும் பாலினத் தேர்வைத் தடை செய்யும் சட்டம் 1994 குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில், இணை இயக்குநர், துணை இயக்குநர், திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.