News April 10, 2024

ராமநாதபுரம்: பிரச்சாரத்தில் நடந்த ருசிகரம்

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் சாயல்குடியில் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னதாக கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்த நிலையில் கலைந்துசென்ற திமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிமுக வேட்பாளரை கண்டதும் வரவேற்பதுபோல கைகளை காட்டி ஆரவாரம் செய்தனர். இச்செயல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரு வேட்பாளர்களுக்கும் தங்கள் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Similar News

News August 20, 2025

ராம்நாடு: கோர்ட்டில் வேலை! உடனே APPLY

image

ராமநாதபுரம் மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் <>உயர்நீதிமன்ற இணையதள<<>> பக்கத்திற்கு சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

News August 20, 2025

ராம்நாடு இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! உடனே APPLY

image

ராமநாதபுரம் இளைஞர்களே, அரசு (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். https://tahdco.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு இலவசமாக வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

News August 20, 2025

மண்டபம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் முகாம்

image

மண்டபம், மறவர் தெரு கடற்கரை பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று ஆகஸ்ட் 19.08.2025 செவ்வாய்கிழமை முதல் 21.08.2025 வியாழன் கிழமை வரை ஆதார்கார்டு இல்லாத அல்லது புதுப்பிக்க வேண்டிய மாணவர்களுக்கு தபால் நிலையத்தில் இருந்து வந்து சிறப்பு சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கு கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!