News September 2, 2025
சாயங்காலத்திற்கு பிறகு இதை செய்யாதீங்க..!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாலை 5 மணிக்கு பிறகு 5 விஷயங்களை செய்யக்கூடாதாம். பால், தயிர், உப்பு, சர்க்கரை, மஞ்சள் இவற்றை கடனாகவோ தானமாகவோ அளிக்கக் கூடாது எனவும் அப்படி செய்தால், செல்வ இழப்பை சந்திக்கலாம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். மேலும், குடும்ப மகிழ்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம். அதனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் இதனை கேட்டால் முடிந்தளவு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே கொடுங்கள். SHARE IT.
Similar News
News September 3, 2025
நோய்களை விரட்டும் இஞ்சி `ஹெர்பல் டீ’

தினசரி இஞ்சி டீ குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதிலுள்ள ஃபைடோநியூட்ரின்ட்ஸ் & ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் & அழற்சிகள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், கல்லீரல் பிரச்னைகள் & ஆஸ்துமா பாதிப்புகளை தணிக்கும். சளி, சைனஸ் தொந்தரவுகள், தொண்டை புண் ஆகியவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும். SHARE IT.
News September 3, 2025
SPORTS ROUNDUP: பாகிஸ்தானை பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

*ENG vs SA ODI: முதல் ODI-ல், ENG 131 ரன்களில் சுருண்டுவிட, 20.5 ஓவர்களில் SA அணி வெற்றி பெற்றது.
*ப்ரோ கபடி 2025: பெங்களூரு புல்ஸ் அணியை 41- 34 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது தபாங் டெல்லி.
*நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: ஈரானிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி.
*PAK vs AFG T20: முதல் T20-ல், 20 ஓவர்களில் AFG 169/5 எடுக்க, PAK 151/9 ரன்களை மட்டுமே எடுத்து, 18 ரன்களில் தோல்வியடைந்தது.
News September 3, 2025
காபி குடிச்சதும் தண்ணீர் குடிக்கிறீங்களா?

காபி குடித்ததும், தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. காபி குடித்த பிறகு நாக்கில் சுவை மொட்டுகளில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என தோன்றுவதாக குறிப்பிடுகின்றனர். ஆனால், இதனால் சில பிரச்னைகள் உண்டாகும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி பருகுவதால் செரிமான பிரச்னைகள் உண்டாகலாம். *வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படலாம். SHARE IT.