News September 2, 2025

குடும்பத்திற்காக இந்தியாவை ஓரங்கட்டிய டிரம்ப்: சல்லிவன்

image

பாகிஸ்தானில் தனது குடும்ப முதலீடுகளை மேம்படுத்தவே, இந்தியாவை டிரம்ப் ஓரங்கட்டியதாக USA-ன் முன்னாள் NSA ஜேக் சல்லிவன் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா உடனான நட்பை வலுப்படுத்த USA நீண்டகாலமாக உழைத்ததாகவும், டிரம்ப் அதை நாசாமாக்கிவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். டிரம்பின் குடும்ப நிறுவனம், பாக்.,-ன் கிரிப்டோ கவுன்சிலுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 14, 2026

விருதுநகர்: Ex.ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மூவர் கைது

image

விருதுநகர் – மல்லாங்கிணறு சாலையில் வரலொட்டிக்கு பைக்கில் சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியை வில்லிபத்திரி அருகே மர்ம நபர்கள் கடந்த 10-ம் தேதி இரவு வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவத்தில் வரலொட்டியை சேர்ந்த மணிகண்டன், மல்லாங்கிணறு இருளப்பன், ராஜா ஆகிய மூவரையும் மல்லாங்கிணறு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வலை வீசி தேடி வருகின்றனர்.

News March 14, 2026

பெட்ரோலை கேன்களில் பிடிக்காதீர்.. அரசு எச்சரிக்கை

image

நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய பெட்ரோல் & இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. TN-ல் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்வதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பங்க் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பங்க்குகள் & டீலர்கள் விதிகளை மீறக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

News March 14, 2026

பழம்பெரும் நடிகை மது காலமானார்

image

பழம்பெரும் நடிகை மது மல்ஹோத்ரா(72) காலமானார். 80’ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த அவரது கண்ணசைவை காணவே தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் ஏராளம். அமிதாப் பச்சனின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், SATTE PE SATTA, KARZ, VISHWANATH உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!