News September 2, 2025
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய கலெக்டர்

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, உடனடியாக மனுக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு கலெக்டர் மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
Similar News
News September 3, 2025
தி.மலை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!
News September 3, 2025
தி.மலை: நாய் குறுக்கே வந்து சிறுமி பலி

தி.மலை ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி தமிழ்செல்வி, மகள் அனாமிகா மூவரும் நேற்று சேத்துப்பட்டு அருகே பைக்கில் சென்ற போது, 10க்கும் மேற்பட்ட நாய்கள் சண்டையிட்டு கொண்டு பைக் மீது பாய்ந்ததில் மூவரும் கீழே விழுந்தனர். இதில் சிறுமி அனாமிகா பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தெருநாய்கள் பிரச்சனை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 3, 2025
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் நோக்கம், பேரிடரின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவது ஆகும்.