News September 2, 2025

நடிகை ரன்யா ராவிற்கு ₹102 கோடி அபராதம்

image

தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவிற்கு ₹102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து 14.8 கி.கி., தங்கம் கடத்தி வந்த போது, பெங்களூரு ஏர்போர்ட்டில் வைத்து கடந்த மார்ச் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மேற்கூறிய அபராதத்தை செலுத்த தவறினால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரன்யா தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் நடித்தவர்.

Similar News

News September 3, 2025

துன்பங்களை நீக்கும் ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி மந்திரம்!

image

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்!

பொருள்:
வஜ்ரம் போன்ற சிங்க நகங்களை கொண்டவரும், தன் பக்தர்களுக்கு எப்போதும் அருளை வாரி வழங்குபவருமான நரசிம்ம பெருமானே என்னை காத்தருளுங்கள். SHARE IT.

News September 3, 2025

TNPSC குரூப் 4: ஜனாதிபதிக்கு தேர்வர்கள் கடிதம்

image

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, முனைவர் பட்ட அளவிலான கேள்விகளை உள்ளடக்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சீலிடப்படாத கேள்வித்தாள்கள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுதேர்வு நடத்த வேண்டும், குளறுபடிகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி, PM, கவர்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.

News September 3, 2025

ஆப்கனுக்கு 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா

image

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது. போர்வைகள், டெண்ட்டுகள், மருந்து பொருள்கள், தண்ணீர் டேங்கர்கள், வீல்சேர்கள், சானிட்டைசர் உள்ளிட்ட 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!