News September 2, 2025

பல்வேறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி

image

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் நலத்துறையின்
சார்பில் நடைபெற்ற ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் மக்களுக்கு அரசின் திட்டங்கள் கொண்டு செல்ல பல்வேறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (02.09.2025) தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Similar News

News September 3, 2025

கள்ளக்குறிச்சி: வழுக்கி விழுந்து பரிதாப பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்ததை சேர்ந்தவர் மல்லிகா (வயது 70). கடந்த ஓராண்டாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வீடு வாசலில் இருந்து வழுக்கி விழுந்து மயங்கினார். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 3, 2025

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பெண் உயிரிழப்பு

image

கச்சிராயபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற மாரியம்மாள், எதிரே வந்த சந்துருவின் இருசக்கர வாகனத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 3, 2025

தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விரும்புவோர், வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளி, அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

error: Content is protected !!