News September 2, 2025

இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கு பயிற்சி

image

கள்ளக்குறிச்சியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புக்கு நேரில் சென்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

Similar News

News March 9, 2026

FLASH: கல்வராயன் மலை அருகே சாக்கு பையில் சடலம்!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மயம்பாடி ஆற்றில், கோணிப் பையில் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் யார்? கொலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 9, 2026

கள்ளக்குறிச்சியில் 250 கோழிகள் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

கள்ளக்குறிச்சி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

error: Content is protected !!