News September 2, 2025
செப்.12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட கவிஞர்கள் தமிழ் அறிஞர்கள் சான்றோர்கள் ஆகியோர் 2025ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வருகின்ற 12ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் சேவையில் மாற்றம்!

ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (செப்.18) சேலம் வழியாக செல்லும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (56108) திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படமாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 17, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் !

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.17) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 17, 2025
கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம் !

சேலம் கடைவீதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையினை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.492.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.