News September 2, 2025
EPS பயணம் தோல்வி பயத்தை காட்டுகிறது: சேகர் பாபு

EPS-ன் சுற்றுப்பயணத்தால் எந்த பலனுமில்லை என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், EPS தொடங்கியுள்ள சுற்றுப்பயணம் தோல்வி பயத்தை காட்டுவதாக தெரிவித்தார். மேலும் அவருடைய பயணத்தை, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்பதற்கு பதிலாக ‘சம்பாதித்ததை காப்போம்- சம்மந்தியை மீட்போம்’ என்று எடுத்துக் கொள்ளலாம் என சேகர் பாபு கிண்டல் செய்துள்ளார்.
Similar News
News March 7, 2026
மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 7, 2026
BREAKING: சம்பள உயர்வு.. அறிவித்தது தமிழக அரசு

மே மாதம் முதல் மருத்துவத் துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம், 41,000 ஊழியர்களுக்கு 2026- 27-ம் ஆண்டுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றும் இதன்மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ₹169 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு ஊதிய உயர்வு என்ற விவரங்களுடன் விரைவில் அரசாணை வெளியாகும்.
News March 7, 2026
EPS-ன் பொதுச் செயலாளர் பதவியை பாஜக பறிக்கும்: CM

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு பாஜகவால் ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு EPS-க்கு பதில் வேறு ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. EPS-ஐ இந்த தேர்தல் வரைக்கும்தான் பாஜக பொறுப்பில் வைத்திருக்கும். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்போதே அவர் பதவி பறிபோயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


