News September 2, 2025
PM மோடிக்கு முதலிடம்: விஜய் எத்தனையாவது தெரியுமா?

ஆகஸ்ட்டில் மிகவும் பிரபலமான இந்தியர்களின் பட்டியலில் விஜய் முக்கியமான இடத்தை பெற்றுள்ளார். X தள பதிவுகளின் அடிப்படையில் வெளியான சர்வேயில், PM மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதில், 3-வது இடம் பிடித்து விஜய் அசத்தியுள்ளார். ரஜினி 10-வது இடத்தில் உள்ளார். ஜுனியர் NTR(2), பவன் கல்யாண்(4), சுப்மன் கில்(5), ராகுல் காந்தி(6), விராட் கோலி(7), மகேஷ் பாபு(8), தோனி(9) ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
Similar News
News September 3, 2025
லண்டன் சென்றடைந்தார் CM ஸ்டாலின்

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றடைந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, லண்டனில் முக்கிய முதலீடுகளை ஈர்க்கவுள்ளார். முன்னதாக, ஜெர்மனியில் ₹3.201 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
News September 3, 2025
நீதிமன்றங்களில் AI பயன்பாடு?

பள்ளி மாணவர்களும் AI கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் உலகில் தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நீதித்துறையிலும் AI நுழைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட, அமர்வு நீதிமன்றங்களில் வரும் சிறிய வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக AI பயன்பாட்டை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக வழக்குகளை கையாள முடியும். உங்கள் கருத்து என்ன?
News September 3, 2025
டைட்டில் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் ஆசிய கோப்பை

ஆன்லைன் கேமிங் ஒழுங்காற்று மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து Dream 11 உள்ளிட்ட நிறுவனங்கள், BCCI ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகின. இதனால் ஆசிய கோப்பை தொடருக்கான ஸ்பான்சர்ஷிப்பை தேடும் முயற்சியில் BCCI களமிறங்கியது. இருப்பினும், டி-ஷர்ட் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் இத்தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்பர் என தகவல் வெளியானது. இந்நிலையில், டைட்டில் ஸ்பான்சரும் கிடையாது என்றும் கூறப்படுகிறது.