News September 2, 2025

சாம் CS-ஐ கழட்டிவிடும் லோகேஷ்?

image

எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் படங்களை இயக்கமாட்டேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அனிருத் சினிமாவை விட்டு போனால் மட்டுமே வேறு இசையமைப்பாளரை நாடி செல்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ‘கைதி 2’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என லோகேஷ் உறுதியளித்ததாக இசையமைப்பாளர் சாம் CS கூறிய நிலையில், தற்போது சாமை கழட்டிவிட முடிவு செய்துள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Similar News

News March 11, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

image

திருச்சி திமுக மாநில மாநாட்டில் <<19350365>>நகைக் கடன்<<>> தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை சேர்க்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனிமொழி தலைமையிலான குழு, தேர்தல் அறிக்கையை விரைவில் ஸ்டாலினிடம் வழங்க உள்ளது. இதன்பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

News March 11, 2026

NDA கூட்டணியில் விஜய்? TTV சூசகம்

image

NDA கூட்டணி வலுப்பெறுவது தமிழகத்திற்கு நல்லது என TTV தினகரன் கூறியுள்ளார். கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு, NDA-வில் புதிய கட்சிகள் வருவது சிறப்பான விஷயம் என்றார். கூட்டணி மேலும் வலுப்பெற வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார். கூட்டணிக்கு விஜய் வந்தால், சீட் பங்கீடு தொடர்பாக EPS மற்றும் பாஜக டெல்லி தலைமை பேசி முடிவெடுப்பார்கள் என பேசினார்.

News March 11, 2026

BREAKING: நடிகை ஹன்சிகா விவாகரத்து!

image

கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா காதலித்து திருமணம் செய்த நடிகை ஹன்சிகா விவாகரத்து பெற்றுள்ளார். எந்தவித ஜீவனாம்சமும் அவர் கணவரை பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் சேர்ந்து வாழ வைக்க குடும்பத்தினர் பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இன்ஸ்டாவில் இருந்து கணவருடனான போட்டோக்களை டெலிட் செய்த ஹன்சிகா, விவாகரத்தை சூசகமாக அறிவித்திருந்தார்.

error: Content is protected !!