News September 2, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சேலத்தில் உள்ள அனைத்து விதமான மதுபானம் கடைகள், மதுபானக்கூடங்கள், திறக்க கூடாது என்றும், தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி திறக்கும் கடைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 3, 2025
சேலம்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!

சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் செயல்பட்டு வருகின்ற மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம், என சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.02) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 2, 2025
மகளிர் உரிமைத்தொகைக் கோரி விண்ணப்பம்!

சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 79,516 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 89,718 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.