News September 2, 2025

GMail பயனர்களுக்கு ஆபத்தா? உண்மையை உடைத்த கூகுள்

image

பல கோடி பேரின் G-Mail கணக்குகள் ஹேக் ஆகும் அபாயம் இருப்பதால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றக் கூறி கூகுள் அறிவுறுத்தியதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில், தாங்கள் அப்படி எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், GMail-ல் ஹேக்கர்ஸ் உள்நுழைய முற்படுவது வழக்கம் என்றாலும், அதனை தடுக்கும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News September 3, 2025

டைட்டில் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் ஆசிய கோப்பை

image

ஆன்லைன் கேமிங் ஒழுங்காற்று மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து Dream 11 உள்ளிட்ட நிறுவனங்கள், BCCI ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகின. இதனால் ஆசிய கோப்பை தொடருக்கான ஸ்பான்சர்ஷிப்பை தேடும் முயற்சியில் BCCI களமிறங்கியது. இருப்பினும், டி-ஷர்ட் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் இத்தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்பர் என தகவல் வெளியானது. இந்நிலையில், டைட்டில் ஸ்பான்சரும் கிடையாது என்றும் கூறப்படுகிறது.

News September 3, 2025

செப்டம்பர் 3: வரலாற்றில் இன்று

image

*1875 – முதலாவது அதிகாரப்பூர்வமான போலோ விளையாட்டு, அர்ஜென்டினாவில் விளையாடப்பட்டது.
*1951 – இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறந்தநாள்.
*1958 – தமிழ் மொழி சிறப்பு அமலாக்க சட்டமூலம், இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*1967 – ஸ்வீடனில், இடது பக்க வாகன ஓட்டம் வலப்பக்கமாக ஒரே இரவில் மாற்றப்பட்டது. *1992 – இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் பிறந்தநாள்.

News September 3, 2025

ரஜினியே ரத்தத்தை நம்பி இருக்கிறார்: ராதா ரவி

image

வெட்டுக்குத்து உள்ள படங்கள் தான் தற்போது வெற்றி பெறுவதாக ராதா ரவி தெரிவித்துள்ளார். பட விழா ஒன்றில் பேசிய அவர், ரஜினிகாந்த் படத்திலேயே ரத்தக்கறைகள் படிந்துள்ளதாகவும், அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது நாம் என்ன பெரிய ஆளா? என்று கூறினார். சமீபத்தில் வெளியான ‘கூலி’ படம் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் படங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதா?

error: Content is protected !!