News September 2, 2025

தி.மலை: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

image

தி.மலை இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் செ.21க்குள் விண்ணப்பிக்கலாம்.ஷேர்

Similar News

News September 3, 2025

பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

image

திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் நோக்கம், பேரிடரின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவது ஆகும்.

News September 2, 2025

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., ஆகியோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

News September 2, 2025

மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய கலெக்டர்

image

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, உடனடியாக மனுக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு கலெக்டர் மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

error: Content is protected !!