News September 2, 2025
இந்திய மக்களை ஆத்திரமூட்டிய இலங்கை அதிபர்: CPI சாடல்

கச்சத்தீவை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என <<17588606>>இலங்கை அதிபர்<<>> தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது என CPI மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை இது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழக மீனவர்கள் குறித்த அவரது அணுகுமுறை தவறாக உள்ளதாகவும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 3, 2025
செப்டம்பர் 3: வரலாற்றில் இன்று

*1875 – முதலாவது அதிகாரப்பூர்வமான போலோ விளையாட்டு, அர்ஜென்டினாவில் விளையாடப்பட்டது.
*1951 – இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறந்தநாள்.
*1958 – தமிழ் மொழி சிறப்பு அமலாக்க சட்டமூலம், இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*1967 – ஸ்வீடனில், இடது பக்க வாகன ஓட்டம் வலப்பக்கமாக ஒரே இரவில் மாற்றப்பட்டது. *1992 – இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பிறந்தநாள்.
News September 3, 2025
ரஜினியே ரத்தத்தை நம்பி இருக்கிறார்: ராதா ரவி

வெட்டுக்குத்து உள்ள படங்கள் தான் தற்போது வெற்றி பெறுவதாக ராதா ரவி தெரிவித்துள்ளார். பட விழா ஒன்றில் பேசிய அவர், ரஜினிகாந்த் படத்திலேயே ரத்தக்கறைகள் படிந்துள்ளதாகவும், அவரே ரத்தத்தை நம்பி இருக்கும்போது நாம் என்ன பெரிய ஆளா? என்று கூறினார். சமீபத்தில் வெளியான ‘கூலி’ படம் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதா?
News September 3, 2025
10-வது மட்டுமே படித்தவர் ₹1 கோடி சேமித்த கதை

பெங்களூருவில் 10-வது மட்டுமே படித்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளில் ₹1 கோடி சேமித்து கவனத்தை ஈர்த்துள்ளார். ₹4,200 சம்பளத்தில் வேலையை தொடங்கிய அவர், வங்கிகளில் FD, RD மூலம் பணம் சேமித்துள்ளார். வேலைக்கு சேர்ந்த அடுத்த சில ஆண்டுகளில் கடின உழைப்பால் ₹63,000 வரை சம்பளம் உயர்ந்தாலும் அவர் வீடு, கார் என எதையும் வாங்கவில்லை. நமது இலக்குகளை அடைய பொறுமையும், ஒழுக்கமும் அவசியம் என அவர் கூறுகிறார்.