News April 10, 2024
அதிமுகவின் ஆணி வேர் ஆர்.எம்.வீரப்பன்

அதிமுகவை தொடங்குவதற்கு ஆணி வேராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அரசியல் முடிவுகளை மிக சிறப்பாக எடுக்கக்கூடிய அவர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்க அவருக்கு பெரிதும் ஊக்கமளித்தார். மேலும், எம்ஜிஆரின் அன்பையும் ஆர்.எம்.வீ முழுமையாக பெற்றிருந்தார் எனக்கூறிய அவர், அதிமுகவுக்கும், திராவிட இயக்கத்துக்கும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத துயரம் என்றார்.
Similar News
News March 9, 2026
தி.மலை: அணு அணுவாய் பிரிந்த உயிர்!

வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (81). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News March 9, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(9.03.2026) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இன்றைய தினம் இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
News March 9, 2026
பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும். ➤ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ➤லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். ➤பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it.


