News September 2, 2025
மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான டாஸ்மார்க் மதுபான கடைகளும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்களும் நாள் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 3, 2025
கொந்தளித்த காஞ்சிபுரம் மக்கள்

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாவதைக் கண்டித்து, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News September 3, 2025
காஞ்சிபுரம் வட்டாரத்தில் அதிரடி சோதனை

காஞ்சிபுரம், உத்திரமேலூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று RTO அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காதவை, ஓட்டுநர் உரிமம் (ம) அனுமதி சீட்டு இல்லாதவை, வரி செலுத்தாதவை, தார்பாலின் மூடாதவைகள், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் உள்ளிட்ட பல்வேறு 152 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.22,07,735 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
காஞ்சியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <