News September 2, 2025

வங்கி கடன் வட்டி குறைகிறது

image

செப். 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் நிர்ணயிக்கும் அடிப்படை வட்டி விகிதமான MCLR-ல் பஞ்சாப் நேஷனல் வங்கி 15 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. அதேபோல், பேங்க் ஆஃப் இந்தியா 5 – 15 புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, கார் மற்றும் தனிநபர் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Similar News

News September 3, 2025

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

image

*எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காக துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
*கோழைகளே பாவ காரியங்களை புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருபோதும் பாவம் செய்யார்.
*சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
*எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
*உறுதியுடன் இரு, அதற்கு மேலாக தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

News September 3, 2025

பொறுப்பு டிஜிபி நியமனம்: HC-ல் வழக்கு

image

தமிழக பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் வரதராஜ் தரப்பில் HC-ல் முறையிடப்பட்டது. தற்காலிக அடிப்படையில் டிஜிபியை நியமிக்கக்கூடாது என்ற SC-ன் தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் ர்ச்த்க்ப்ஃப்ட்

News September 3, 2025

விஜய் நினைத்திருந்தால்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

image

‘குட்டி தளபதி’யாக நான் நினைத்திருந்தால், என்னிடம் விஜய்யும் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார், நானும் அதை வாங்கியிருக்க மாட்டேன் என்று SK கூறியுள்ளார். ‘மதராஸி’ பட நிகழ்வில் பேசிய அவர், அண்ணன் அண்ணன் (விஜய்) தான், தம்பி தம்பி தான் என்றார். ‘கோட்’ படத்தின் ஒரு காட்சியில் வரும் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சியால், இதுபோன்ற பேச்சுகள் இணையத்தில் உலாவியது.

error: Content is protected !!