News September 2, 2025
கட்சியில் இருந்து கவிதாவை இடைநீக்கம் செய்த KCR

BRS கட்சியில் இருந்து தனது மகளை சந்திரசேகர ராவ் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிந்தர் ராவ் தெரிவித்துள்ளார். ஹரிஷ் ராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள், கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Similar News
News September 3, 2025
பொறுப்பு டிஜிபி நியமனம்: HC-ல் வழக்கு

தமிழக பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் வரதராஜ் தரப்பில் HC-ல் முறையிடப்பட்டது. தற்காலிக அடிப்படையில் டிஜிபியை நியமிக்கக்கூடாது என்ற SC-ன் தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் ர்ச்த்க்ப்ஃப்ட்
News September 3, 2025
விஜய் நினைத்திருந்தால்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

‘குட்டி தளபதி’யாக நான் நினைத்திருந்தால், என்னிடம் விஜய்யும் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார், நானும் அதை வாங்கியிருக்க மாட்டேன் என்று SK கூறியுள்ளார். ‘மதராஸி’ பட நிகழ்வில் பேசிய அவர், அண்ணன் அண்ணன் (விஜய்) தான், தம்பி தம்பி தான் என்றார். ‘கோட்’ படத்தின் ஒரு காட்சியில் வரும் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சியால், இதுபோன்ற பேச்சுகள் இணையத்தில் உலாவியது.
News September 3, 2025
2 வாக்காளர் அட்டை விவகாரம்: தேர்தல் ஆணையம் சம்மன்

பாஜக, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இதனிடையே, காங்.,ன் பவன் கேரா 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக பாஜகவின் அமித் மாள்வியா குற்றஞ்சாட்டினார். இதில் ஒன்றை நீக்குவதற்கு ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டதாக பவனும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் செப்.8-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று பவனுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.