News September 2, 2025

BREAKING: அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS.. புதிய தகவல்

image

செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், புதிய திட்டத்தை தீட்டி வருகிறாராம். ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் கட்டமைக்க, அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சசிகலா, OPS இருவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்துதான் செங்கோட்டையனும் 5-ம் தேதி பேச உள்ளாராம். இதற்கு EPS சம்மதம் தெரிவிப்பாரா?

Similar News

News September 3, 2025

விஜய் நினைத்திருந்தால்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

image

‘குட்டி தளபதி’யாக நான் நினைத்திருந்தால், என்னிடம் விஜய்யும் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார், நானும் அதை வாங்கியிருக்க மாட்டேன் என்று SK கூறியுள்ளார். ‘மதராஸி’ பட நிகழ்வில் பேசிய அவர், அண்ணன் அண்ணன் (விஜய்) தான், தம்பி தம்பி தான் என்றார். ‘கோட்’ படத்தின் ஒரு காட்சியில் வரும் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சியால், இதுபோன்ற பேச்சுகள் இணையத்தில் உலாவியது.

News September 3, 2025

2 வாக்காளர் அட்டை விவகாரம்: தேர்தல் ஆணையம் சம்மன்

image

பாஜக, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இதனிடையே, காங்.,ன் பவன் கேரா 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக பாஜகவின் அமித் மாள்வியா குற்றஞ்சாட்டினார். இதில் ஒன்றை நீக்குவதற்கு ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டதாக பவனும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் செப்.8-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று பவனுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

News September 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 447 ▶குறள்: இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். ▶ பொருள்: இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

error: Content is protected !!