News September 2, 2025
பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பின்தங்கிய இந்தியா

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 17 ஆண்டுகளாக ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அமைதி குறியீட்டு அறிக்கையின்படி, அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா, பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா 115-வது இடத்திலும், பாக்.,144-வது இடத்திலும் உள்ளன. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ரஷ்யா கடைசி இடத்தில் உள்ளது.
Similar News
News September 4, 2025
GST உயர்வு.. ரசிகர்களுக்கு கனவாக மாறும் IPL!

GST வரி மாற்றங்களில், IPL டிக்கெட் விலைகளுக்கான வரி 28%-ல் இருந்து 40% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், குறைந்தபட்சமாக விற்கப்படும் ₹500 டிக்கெட், இனி ₹700-ஐ தாண்டும் என கூறப்படுகிறது. இது டிக்கெட் விலையை மட்டுமின்றி, ஒட்டுமொத்த விளையாட்டையும் பாதிக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. பணக்காரர்களின் விளையாட்டாக மாறி, IPL சாமானிய ரசிகர்களுக்கு கனவாக மாறிவிடுமோ என்ற கேள்வியும் எழுகிறது.
News September 4, 2025
பாஜகவுக்கு புதிய தலைவர்.. வெளியானது லிஸ்ட்!

BJP தேசிய தலைவர் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ரேஸில், MH CM தேவேந்திர பட்னவிஸ் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குஜராத்தை சேர்ந்த Ex மத்திய அமைச்சர் கோடபாய் ரூபாலா, மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். வரும் 9-ம் தேதி, துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் புதிய தலைவருக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
News September 4, 2025
தொழில் தொடங்கணும், ஆனா பணம் இல்லையா?

உற்பத்தி மற்றும் சேவைத் துறையில், தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசின் PMEGP திட்டம் ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது. பெறப்படும் கடனில் வெறும் 65% அடைத்தால் போதும். கடனை அடைக்க 7 ஆண்டுகள் வரை நேரம் கொடுக்கப்படும். 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த திட்டத்திற்கு www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE.