News September 2, 2025
ஆசிரியர்களை அரசு கைவிடாது: அன்பில் மகேஸ் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று <<17579658>>உச்சநீதிமன்றம் <<>>
நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களை கைவிடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தீர்ப்பு முழுமையாக வந்தவுடன், அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News September 3, 2025
Big Bash League தொடரில் அஸ்வின்?

சமீபத்தில் IPL தொடரில் இருந்து விலகிய அஸ்வின், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், Big Bash League தொடரில் அவர் விளையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, IL தொடரில் பங்கேற்பதற்கான ஏலத்திற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் அஸ்வினின் கவனம் என தெரிகிறது. முன்னதாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
News September 3, 2025
பூஜ்ஜியம் மார்க்கிற்கு முதுநிலை மருத்துவ சீட்

நீட் தேர்வில் 50% கட்-ஆஃப் பெற்றால் மட்டுமே முதுநிலை மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும். ஆனால் பூஜ்ஜியம், மைனஸ் (-) மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீட் கிடைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், முதுநிலை கலந்தாய்வில் காலியிடங்கள் அதிகரித்ததால் 0% முறை அமல்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
News September 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 3, ஆவணி 18 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை