News September 2, 2025
தீபாவளி பரிசு… சம்பளம் உயர்கிறது

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். இதன் அடிப்படையில், தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 55%-லிருந்து 58%ஆக 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தமிழக அரசும் அகவிலைப்படியை 3% உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 3, ஆவணி 18 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News September 3, 2025
குஜராத் நிறுவனங்கள் வளர எங்களை தவிக்கவிடுவதா? CM

அமெரிக்கா உடனான பிரச்னைகளில் தீர்வு கண்டு, ‘விஸ்வ குரு’ என்ற பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள் என PM மோடியை CM ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தாங்கள் ஆதரித்த டிரம்ப் விதித்துள்ள வரியால், டாலர் நகரான திருப்பூர் தவிப்பதாகவும், குஜராத் சுத்தகரிப்பு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைக்க எங்கள் ஏற்றுமதியாளர்களை தவிக்கவிடுவதில் என்ன நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 3, 2025
லோகேஷ் AD இயக்கத்தில் விக்ரம்?

லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஷ்ணு, தற்போது கவின் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘Hi’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும், கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.