News September 2, 2025
திருவள்ளூர்: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
Similar News
News September 3, 2025
ஆவடி: வடமாநில ஊழியர்கள் விவரங்கள் சேகரிக்க உத்தரவு

ஆவடி பகுதியில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில நபர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூர் காட்டுப்பள்ளியில் போலீசார் மீது வடமாநில நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, வல்லூர் அனல் மின் நிலையம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகப் பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில ஊழியர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
News September 2, 2025
திருவள்ளூரில் கருவின் பாலினம் குறித்த விழிப்புணர்வு பேரணி.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை சார்பில், இன்று (செப்.2) கருவின் பாலினம் அறிவித்தல் மற்றும் பாலினத் தேர்வைத் தடை செய்யும் சட்டம் 1994 குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில், இணை இயக்குநர், துணை இயக்குநர், திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
News September 2, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (2/09/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.