News September 2, 2025
கள்ளக்குறிச்சி: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

கள்ளக்குறிச்சி இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
Similar News
News September 3, 2025
தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விரும்புவோர், வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளி, அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
News September 3, 2025
கார் மோதி முதியவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள அக்ராபாளையம் சர்க்கரை ஆலை பகுதியில், தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கொடியன் (வயது 60), நேற்று காலை கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கச்சிராயபாளையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற கார், இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 2, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(2.9.2025 ) இன்று 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.