News September 2, 2025

விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 3, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

▶️ மயிலம்
▶️ அய்யன்கோயில்பட்டு, கோலியனூர்
▶️ அருங்குறுக்கை, திருவெண்ணெய்நல்லூர்
▶️ முகையூர்
▶️ நடுக்குப்பம், கோட்டக்குப்பம்
▶️ அனந்தபுரம்
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்

News September 3, 2025

தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவை பகுதியாக ரத்து.

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் செப்டம்பர் 6, 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நாள்களில், விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரம் என்பதற்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து புறப்படும்.

News September 2, 2025

விழுப்புரம் – திருப்பதி ரயில் சேவை பகுதியாக ரத்து.

image

விழுப்புரம் – திருப்பதி செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16854), செப்டம்பர் 3, 5, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், காட்பாடி – திருப்பதி இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டு, ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். பின்னர், அங்கிருந்து மறு மார்க்கமாக விழுப்புரம் நோக்கி மாலை 4:40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

error: Content is protected !!