News September 2, 2025
புதுவை: ரூ.80,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தேசிய அளவில் வங்கிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கு 21.09.2025 தேதிக்குள் <
Similar News
News September 3, 2025
புதுவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் சாவு

புதுவை பூமியான்பேட், புது தெரு சதீஷ், தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷின் தந்தை கடந்த 30ம் தேதி இறந்தார். அதிலிருந்து மனமுடைந்த நிலையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 3, 2025
புதுச்சேரி: உதவித் தொகை வழங்கிய முதல்வர்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று 72 இளநிலை வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகையாக, ரூ.86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்ட செயலர் கேசவன், சட்டத்துறை சார்பு செயலர் ஜானாஸ் ரபி என்கிற ஜான்சி வழக்கறிஞர், சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
News September 3, 2025
புதுச்சேரி: 21 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பணிபுரியும் 21 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. புதுச்சேரி அரசு இதனை தொடர்ந்து திருக்கனூர் அரசு பெண்கள் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் கற்பகாம்பாள் அவர்களுக்கு, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது.