News September 2, 2025
நீலகிரி: உங்கள் ஊரிலே வங்கி வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே! உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம் (IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதும். தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News September 3, 2025
நீலகிரி அரசு பஸ்களுக்கு ரூ.428 கோடி நஷ்டம்!

நீலகிரியில் 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு தினசரி, 30 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.மலை மாவட்டம் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கடந்த, 20 ஆண்டுகளில், 428 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என, போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
News September 3, 2025
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு!

மிலாடி நபி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம், பார்கள்,கடைகள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் அறிந்தால், அது குறித்த விவரத்தை அதன்படி, ‘கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், ஊட்டி (0423-2223802); உதவி ஆணையர் (ஆயம்) (0423-2443693); டாஸ்மாக் மாவட்ட மேலாளர், எடப்பள்ளி, குன்னூர் (0423-2234211) தெரிவிக்கலாம்.
News September 3, 2025
மூளைக்காய்ச்சல் நீலகிரி மக்களே உஷார்!

கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 3பேர் இறந்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு தொண்டை வலிகாய்ச்சல் அதிகரித்துள்ளதால் தங்களது குழந்தைகளுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் இருக்குமோ என பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெண்ணீர் பருகவேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என நீலகிரி மருத்துவர்கள் எச்சரிக்கை. SHAREit