News September 2, 2025
எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி கதை எழுத முடியாது: லோகேஷ்

மக்களின் எதிர்ப்பார்ப்பை குறை கூறவில்லை, ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி தன்னால் கதை எழுத முடியாது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கூலிக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களின் எக்சைட்மெண்ட் அதிகமாக இருந்தது. இதுதான் படத்தையும், தன்னையும் வெற்றி பெற வைத்திருப்பதாக அவர் பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு கூலி நெகடிவ் ரிவ்யூக்களுக்கு கொடுக்கும் பதிலாக பார்க்கப்படுகிறது.
Similar News
News September 2, 2025
கர்ப்பத்தில் பாரசிட்டமால் எடுத்தால் குழந்தைக்கு ஆபத்தா?

கர்ப்பிணிகள் பாரசிட்டமால் மாத்திரையை அதிகமாக சாப்பிடுவது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மவுண்ட் சினாய் மற்றும் ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ADHD போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். எனவே, மருத்துவ ஆலோசனைப்படி தான் பாரசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
News September 2, 2025
₹189 ரீசார்ஜில் மாதம் முழுக்க பேசலாம்

சமீபத்தில் ஜியோ நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமான ₹249 திட்டத்தை நிறுத்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. நீங்கள் வேறு குறைவான ரீசார்ஜ் ப்ளான் தேடினால் ₹189 திட்டம் உங்களுக்கு உதவும். இதில் 28 நாள்களுக்கு எண்ணற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றன. அதோடு மொத்தமாக 300 SMS அனுப்பலாம், 2GB நெட் பயன்படுத்திய பிறகு இணைய சேவை 64 Kbps-ல் தொடரும்.
News September 2, 2025
BREAKING: மிலாடி நபி விடுமுறை.. சிறப்பு அறிவிப்பு

மிலாடி நபி(செப்.5) உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது. அதன்படி, செப்.4 முதல் 7-ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.