News September 2, 2025
பழங்குடியின மொழிகளை பாதுகாக்க புதிய AI செயலி

பழங்குடியின மக்களின் மொழிகளைப் பாதுகாக்க ஆதி வாணி என்ற AI செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கோண்டி, பிலி, முண்டாரி போன்ற பழங்குடியின மொழிகளை, இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்டது. இந்த செயலி. பழங்குடியின கதைகள், வாய்மொழி மரபுகள், கலாச்சாரப் பாரம்பரியங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக உதவும். நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றவும் இச்செயலி உறுதுணையாக இருக்குமாம்.
Similar News
News September 3, 2025
அன்புமணி புகைப்படம் நீக்கம்

தைலாபுரம் பாமக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள், உறுப்பினர் படிவங்களில் அன்புமணியின் போட்டோ நீக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி மீது, ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்காற்று குழு 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு பதிலளிக்க அன்புமணிக்கு அவகாசம் கொடுத்தும் அவர் பதிலளிக்கவில்லை. எனவே, நாளை இது பற்றி முடிவெடுக்கப்பட உள்ள நிலையில், போட்டோ நீக்கியது பேசுபொருளாகியுள்ளது.
News September 3, 2025
விலை குறைகிறது… இன்று முக்கிய முடிவு

மோடி சொன்ன ‘<<17521105>>தீபாவளி பரிசுக்காக<<>>’ பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்றும் நாளையும் நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில் 5%, 18% என 2 அடுக்குகளாக கொண்டுவருவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்க்கரை உள்ளிட்ட பலசரக்கு முதல் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் கார், சிகரெட் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
News September 3, 2025
ஒருவழியாக மோடிக்கு தைரியம் வந்துவிட்டது: ஜெய்ராம் ரமேஷ்

ஒரு வழியாக மோடிக்கு மணிப்பூர் செல்ல தைரியம் வந்துவிட்டதாக காங்., பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாக விமர்சித்துள்ளார். கடந்த 2023-ல் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் 260 பேர் உயிரிழந்தனர். ஆனால், PM மோடி இதுவரை அங்கு செல்லவில்லை. இதனை காங்., தொடர்ந்து சாடி வந்தது. இந்நிலையில், செப்.13-ல் வன்முறைக்கு பிறகு முதல்முறையாக மோடி மணிப்பூர் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.