News September 2, 2025

சேலத்தில் ஆவின் பால் கடை வைக்க ஆசையா?

image

சேலம் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE)

Similar News

News September 2, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சேலத்தில் உள்ள அனைத்து விதமான மதுபானம் கடைகள், மதுபானக்கூடங்கள், திறக்க கூடாது என்றும், தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி திறக்கும் கடைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 2, 2025

சேலம்: வங்கியில் வேலை ரூ.80,000 வரை சம்பளம்!

image

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <>கிளிக் <<>>பண்ணுங்க!

News September 2, 2025

சேலம்: செப்.4 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்!

image

சேலம் மாவட்டத்தில் வரும் செப்.4ஆம் தேதி சிறுவாச்சூர் சமுதாயக் கூடம், தொளசம்பட்டி அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி, அயோத்தியாப்பட்டணம் வெங்கடேஷ்வரா திருமண மண்டபம், மேட்டூர் அணை -1 பாப்பம்மாள் திருமண மண்டபம், சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!