News September 2, 2025

கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 2, 2025

கிருஷ்ணகிரி மக்களே! அவசர உதவிக்கு அழையுங்கள்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! அவசர காலங்களில் உதவக்கூடிய முக்கியமான எண்கள்
▶️ மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04343 – 239301
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️ முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️ முதியோர் உதவி எண் – 1800-180-1253
SHARE பண்ணுங்க!

News September 2, 2025

கிருஷ்ணகிரி பாலம் எப்போது திறப்பு?: எம்.பி. அறிவிப்பு.

image

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை, கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டப் பொறியாளர் ரமேஷ் நேற்று(செப்.01) ஆய்வு செய்தனர். பாலத்தில் 2 ‘பேரிங்குகள்’ பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்துப் பணிகளும் முடிந்து வியாழன் முதல் பாலம் போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் என்று எம்.பி. கோபிநாத் தெரிவித்தார்.

News September 2, 2025

கிருஷ்ணகிரியில் செ.5 மதுபான கடைகள் மூடல்

image

நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி, செப். 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், எப்.எல்., 2, 3, 3அ, 4அ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்

error: Content is protected !!