News September 2, 2025
செங்கல்பட்டு: கோயில் நடை நேரம் மாற்றம்

திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில், நாள்தோறும் காலை 6மணி முதல் மதியம் 12:30மணி வரையும், மாலை 3:30மணி முதல், இரவு 8:30மணி வரையும் கோயில் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும். இந்நிலையில் வரும் செப். 7 ந்தேதி சந்திர கிரகணம் என்பதால் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். அதன் பின்னர் மறுநாள் 8-ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 2, 2025
செங்கல்பட்டு மக்களே இந்த நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 044-27427412
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 1077 / 044-27427412
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253 SHARE பண்ணுங்க..!
News September 2, 2025
செங்கல்பட்டு: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

செங்கல்பட்டு இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 2, 2025
தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் அறிவிப்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 13 – 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான 2026 ஜனவரி 24ம் தேதி அரசின் விருதுக்கான ரூ.1 லட்சத்திற்கான காசோலை, பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய பெண் குழந்தைகள் https://awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்