News September 2, 2025

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் வர்த்தகம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 மார்க்கெட் கமிட்டியில் நடப்பாண்டு ஏப் முதல் ஆக வரையிலான காரீப் பருவ அறுவடை காலத்தில் மொத்தம் 47,416 விவசாயிகள் கொண்டு வந்த 20,754 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.88.46 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டி பொறுப்பு அதிகாரி சந்துரு தெரிவித்தார்.

Similar News

News September 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(2.9.2025 ) இன்று 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.

News September 2, 2025

பல்வேறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி

image

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் நலத்துறையின்
சார்பில் நடைபெற்ற ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் மக்களுக்கு அரசின் திட்டங்கள் கொண்டு செல்ல பல்வேறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (02.09.2025) தொடங்கி வைத்து உரையாற்றினார்.

News September 2, 2025

இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கு பயிற்சி

image

கள்ளக்குறிச்சியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புக்கு நேரில் சென்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!